விக்ரம் சாதனைகள் – இணையதளங்கள் & பத்திரிக்கைகளின் ரேட்டிங்க், பிரமாண்ட வசூல் விபரம், வெளியீட்டுக்கு முன்னரே அடைந்த லாப மதிப்பீடு & பட்ஜெட் – கமல், சூர்யா & லோகேஷ் மிரட்டல் – ரசிகனின் லட்சியம் நிறைவேறியது Vikram achievements – Websites & Magazines Rating, Box office Collection Details, Pre-Release Profit Estimate & Film Budget – Kamal, Surya & Lokesh awesome performance - Fan's Ambition Fulfilled
You can see the English verse below திரைப்படம் வெளியான பிறகும் 2022ஆம் ஆண்டின் மிக பெரிய எதிர்ப்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது விக்ரம். நடிகர் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சித்தரங்கள் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் ஸ்டார் ரேட்டிங் பற்றிய விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். இப்படத்தின் பட்ஜெட் மற்றும் இப்படத்தின் வினியோகஸ்தர் உரிமம் யாருக்கு எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது, சாட்டிலைட் ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை எந்த நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்பதை இங்கு காணலாம். 2 வாரங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் விக்ரம் 300 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்துள்ளது. கதை / Story போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் முகமூடி அணிந்த நபர்களால் கொல்லப்படுகின்றனர். விசாரணை நடத்த பகத் ஃபாசில் வருகிறார். இடைவேளி வரை அவரின் விசாரணை காட்சிகள் படத்தை சுறுசுறுப்பாக கடத்தி செல்கிறது. விஜய்சேதுபதி மீது சந்தேக பார்வை வர இடைவேளையின் போது உண்மை தெரிய வருகிறது. போதைப் பொருட்களை அழித்து No Drugs Society ஆக மாற்றும் ...