இடுகைகள்

Spiritual லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விநாயகரை வழிபடும்போது தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் - விநாயகர் சகஸ்ரநாமம், விநாயகர் மூல மந்திரம், விநாயகர் ஸ்லோகம் கணபதி காயத்ரி மந்திரம் த்யான மந்திரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரிகளுடன் Vinayagar Powerful Mantras, Ganapathi Slokas For Daily Pooja - Vinayagar Manthiram, Vināyakar Slōkam, Ganesha Sagasranamam, Original Mantra of Ganesha, Ganapati Gāyatri Mantiram, Meditation Mantra in Tamil and English Lyrics

English text and lyrics at the end of Tamil post சைவ மதத்தின் முதல் தெய்வமாக வணங்கப்படுபவர் பிள்ளையார், கணபதி, கணேசா என பல பெயர்களில் அழைக்கபடும் முழு முதற் கடவுள் விநாயகர். நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் தடைகள், தொந்தரவுகள், வினைகள் போக்கி வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த விநாயகர் சகஸ்ரநாமம், விநாயகர் மூல மந்திரம், விநாயகர் ஸ்லோகம், கணபதி காயத்ரி மந்திரம், த்யான மந்திரம் போ ன்ற மந்திரங்களை சொல்லி பூஜை செய்து நல்ல பலன்களையும், வெற்றிகளையும், அருளையும் பெற்று வாழ்வில் வசந்தம் மற்றும் நற்பேறு அடையலாம். முடிந்தவரை மந்திரங்களை 11 முறை சொல்லுங்கள். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. தமிழ் மந்திரங்கள் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.   அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால். சம்ஸ்கிருதம் விநாயகர் சகஸ்ரநாமம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம்...