இந்திய குடியரசுத் தலைவராக யார் தேர்ந்தெடுக்க வாய்ப்பு? தெரிந்து கொள்வோம் தேர்தல் முறையையும், வாக்கு மதிப்புகளையும் மற்றும் வெற்றிக்கான் வாக்கு மதிப்பையும்.

English Version

YouTube - Tamil

குடியரசுத் தலைவர்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதிய அரசியலமைப்பு நவம்பர் 26 1949இல் நிறைவுற்று ஜனவரி 26  1950 அமல்படுத்த்பட்டு குடியரசு நாடாக மாறியது. இந்திய அரசியலமைப்பை பாதுகாக்கும் அதிகாரம் குடியரசு தலைவர் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

·         இந்தியாவின் முதல் குடிமகன்

·         இந்திய அரசின் தலைவர்

·         மத்திய மற்றும் கூட்டாட்ச்சி நிர்வாக தலைவர்

·         முப்படைகளின் தலைமை தளபதி

தகுதிகள்

·         குறைந்த்பட்சம் 35 வயது

·         மக்களவையின், உறுப்பினராவதற்கான தகுதி

·         அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஊதியம் /இலாப பங்கீடு இருக்க கூடாது

அதிகாரங்கள் மற்றும் பணிகள்

சட்டமுறை அதிகாரங்கள்

·         பாராளுமன்றங்களை கூட்டுதல்

·         கூட்ட முடிவில் அறிவிப்பை வெளியிடுதல்

·         மக்களவையை கலைக்கும் அதிகாரம்

·         சட்டவரைவு மீது அவைகளுக்கும் இடையே எழும் முரண்களை களைய நாடாளுமன்ற கூட்டுக்கூட்டதிற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம்

·         பொதுத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் உரை

·         ஆண்டுத் தொடக்கத்தில்  நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் உரை 

·         12 பேரை மாநிலங்களைவை உறுப்பினராக நியமனம் செய்யும் அதிகார்ம்.

·         ஆங்கிலோ-இந்திய சமூகத்தை சேர்ந்த இருவரை மக்களவைக்கு நியமனம் செய்யும் அதிகார்ம்.

·         சட்டவரைவுகள் ஈரவையிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெரும்போதே அது சட்டமாகிறது.

·         நாடாளுமன்றம் கூடாத நேரங்களில் தேவையிருப்பின் அவசர சட்டங்களை பிறப்பிக்கிறார்.

·         தலைமை தணிக்கை அலுவலர், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிதிக்குழு போன்ற அமைப்புகளின் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கிறார்.

செயல்முறை அதிகாரங்கள்

·         மக்களவையின் பெரும்பான்மையினர் ஆதரவு பெற்றவரை ஆட்சியமைக்க அழைப்பது.

·         அவரை பிரதம மந்திரியாக நியமித்தல்

·         பிரதம மந்திரியின் பரிந்துரைப்படி மற்ற மத்திய அமைச்சர்களை நியமித்தல்

நியமன அதிகாரங்கள்

·         கீழ்க்கண்ட பதவிகளுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் பதவி நியமனம் செய்துவைத்தல்.

·         மாநில ஆளுநர்.

·         உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

·         இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்.

·         இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்.

·         வெளி நாட்டுத் தூதுவர்கள்

·         நிதி அதிகாரங்கள்

·         ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நிதி ஆணையத்தை நிறுவி மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கான நிதியை பகிர்வார்.

·         இராணுவ அதிகாரங்கள்

·         இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி.

மன்னிக்கும் அதிகாரங்கள்

·         உச்ச நீதிமன்றம் அளித்த தண்டனையைக் குறைக்க  அதிகாரம்

அவசரநிலை பிரகடன அதிகாரங்கள்

·         தேசிய அவசரநிலை பிரகடனம்

·         மாநில அவசரநிலை பிரகடனம்

·         நிதிசார் அவசரநிலை பிரகடனம்

குடியரசுத் தலைவர் ஆட்சி

மாநில அரசின் சட்ட ஒழுங்கு மற்றும் இதர செயல்பாடுகள் திருப்தி அளிக்காத பட்சத்தில் கவர்னரின் பரிந்துரையை ஏற்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவார்.

குடியரசு தலைவர் தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது?

இந்திய வாக்காளர் குழு

·         மக்கள் நேரடியாக குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை

·         சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை  & மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்ந்து எடுக்கிறார்கள்

·         நியமன சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமையில்லை

வாக்கு மதிப்பு

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நாம் அளிக்கும் வாக்குகளைப் போல சமமான அளவில் எடுத்து கொள்ள படுவதில்லை.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு மதிப்பு –

(மாநிலத்தின் மக்கள் தொகை / தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை) X 1000)

* 1971ஆம் ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை அளவே கணக்கில் எடுத்த கொள்ளபடுகிறது

உதாரணமாக

தமிழ்நாடு

மக்கள் தொகை - 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை - 4,11,99,168

சட்டமன்ற உறுப்பினர்கள் – தற்போதய எண்ணிக்கை – 234

=          (4,11,99,168 / 234) * 1000

=          176

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு – 176

மொத்த தமிழ்நாட்டின்             சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு = 234*176 = 41,184            

நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு

சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.

உதாரணமாக

மொத்த இந்திய மாநிலங்ககளின் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு = 5,49,474                      

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = மக்களவை (543) + மாநிலங்களவை (233) = 776

= 5,49, 474 / 776 = 708

வாக்குகள் மதிப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள்

தெற்கு இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

ஆந்திரா

175

43,502,708

159

43400

கர்நாடகா

224

29,299,014

131

29,344

கேரளா

140

21,347,375

152

21,280

தமிழ்நாடு

234

41,199,168

176

41,184

தெலங்கானா

119

43,502,708

148

17612

புதுச்சேரி

30

471,707

16

480

லட்ச தீவுகள்

-

-

-

-


மேற்கு இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

கோவா

40

795,120

20

800

குஜராத்

182

26,697,475

147

26,754

மஹாராஷ்டிரா

288

50,412,235

175

50,400

டையு டாமன்

-

-

-

-

தாத்ரா நாகர்

-

-

-

-


வடக்கு இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

ஜம்மு கஷ்மிர்

87

6,300,000

 

6,264

ஹிமாச்சல் பிரதேஷ்

68

3,460,434

51

3468

பஞ்சாப்

117

13,551,060

116

13,572

உத்தரகாண்ட்

70

4,491,239

64

4,480

ஹரியானா

90

10,036,808

112

10,080

டெல்லி

70

4,065,698

58

4,060

ராஜஸ்தான்

200

25,765,806

129

25,800

உத்தர் பிரதேஷ்

403

83,849,905

208

83,824

சண்டிகர்

-

-

-

-


மத்திய இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

சட்டிஸ்கர்

90

11,637,494

129

11,610

மத்திய பிரதேஷ்

230

30,016,625

131

30,130


கிழக்கு இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

பீகார்

243

42,126,236

173

42,039

ஜார்கண்ட்

81

14,227,133

176

14,256

ஒடிஷா

147

21,944,615

149

21,903

மேற்கு வங்காளம்

294

44,312,011

151

44,394

அந்தமான் நிகோபர்

-

-

 

 


வட கிழக்கு இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

அருணாச்சல் பிரதேஷ்

60

467,511

8

480

அசாம்

126

14,625,152

116

14,616

மணிப்பூர்

60

1,072,753

18

1,080

மேகாலயா

60

1,011,699

17

1,020

மிசோரம்

40

332,390

8

320

சிக்கிம்

32

209,843

7

224

திரிபுரா

60

1,556,342

26

1,560

நாகலாந்து

60

516,499

9

540



மொத்தம் சட்டமன்ற வாக்கு மதிப்புகள்            

ஜம்மு கஷ்மீரில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறாததால் 87 உறுப்பினர்களுக்கான வாக்கு மதிப்ப்பு போக மீதம்

இந்தியா

MLA

மக்கள் தொகை

மதிப்பு

மொத்தம்

4,120

54,93,02,055

5,49,474

- ஜம்மு & கஷ்மிர்

87

6,300,000

6,264

ஆக மொத்தம்

4033

4,30,02,055

5,43,210


நாடாளுமன்ற உறுப்பினர்கள் வோட்டு மதிப்பு

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு மதிப்பு /

(லோக்சபா உறுப்பினர்கள் + ராஜ்யசபா உறுப்பினர்கள்)

மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு   -           5,43,210

லோக்சபா உறுப்பினர்கள் = 543

ராஜ்யசபா உறுப்பினர்கள் = 233

=          543,210/ (543+233)

            =          700

            =         700 * 776       =         5,43,200

மொத்த வாக்கு மதிப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள்                    5,43,210

நாடாளுமன்ற உறுப்பினர்கள்                        5,43,200

மொத்தம்                                                     10,92,674

தற்போதைய தேர்தல்

தேர்தல் நடைபெறும் நாள்        -           18.07.2022

வாக்கு எண்ணிக்கை                  -           21.07.2022

பதவி ஏற்பு                                      -           25.07.2022

குடியரசு தலைவர் வேட்பாளர்கள்

பாஜக கூட்டணி                                                                            -           திருமதி  திரௌபதி முர்மு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி         -           திரு யஷ்வந்த் சின்ஹா

தற்போதைய மொத்த வாக்கு மதிப்பு

மக்களவை உறுப்பினர்கள்                   -           543/543

380100

மாநிலங்களவை உறுப்பினர்கள்       -           228/233

(ஜம்மு கஷ்மீரில் 4 & திரிபுராவில் 1 ராஜ்யசபா உறுப்பினர் பதவி காலியாக உள்ளது)

159600

மொத்தம்                                                     -           771/776

539700

சட்டமன்ற உறுப்பினர்கள்                    -           4026/4033 

* 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது

542291

1081991

வெற்றி பெற

51% வாக்கு மதிப்புகள் வேண்டும்.

தற்போதைய தேர்தலில் வெற்றி பெற தேவையான வாக்கு மதிப்புகள் 5,51,816

கள நிலவரம் - கணிப்பு

பி ஜே பி கூட்டணி

NDA – பி ஜே பி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி

NDAவிற்கு ஆதரவு தரும் NDA அல்லாத கட்சிகள் – YSR காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம் போன்றவை

MP/MLA

NDA

NON NDA SUPPORT

BJP

லோக் சபா

336

72

408

வாக்குகள்

235200

50400

285600

ராஜ்ய சபா

104

26

130

வாக்குகள்

72800

18200

91000

சட்டமன்றம்

 

 

0

வாக்குகள்

220942

68606

289548

மொத்தம்

528942

137206

666148


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டணி

UPA– காங்கிரஸ், திரினமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்

UPAவிற்கு ஆதரவு தரும் UPA அல்லாத கட்சிகள் – சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா, வலது மற்றும் இடது கம்னியுஸ்ட்டுகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்றவை

MP/MLA

UPA

NON UPA SUPPORT

CONG + OPP

லோக் சபா

113

21

134

வாக்குகள்

79100

14700

93800

ராஜ்ய சபா

62

36

98

வாக்குகள்

43400

25200

68600

சட்டமன்றம்

 

 

0

வாக்குகள்

161461

89867

251328

மொத்தம்

283961

109719

393680


இன்னும் முடிவு எடுக்காதவர்கள்

MP/MLA

UNDECIDED

லோக் சபா

1

வாக்குகள்

700

ராஜ்ய சபா

0

வாக்குகள்

0

சட்டமன்றம்

0

வாக்குகள்

1415

மொத்தம்

2115


முடிவு எவ்வாறு இருக்கலாம்?

எதிர்ப்பார்க்கப்படும் வாக்கு மதிப்புகள்

பி ஜே பி கூட்டணி – 666148

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டணி - 393680

இன்னும் முடிவு எடுக்காதவர்கள் - 2115

தற்போதைய நிலவரப்படி பிஜேபி கூட்டணியின் வேட்பாளர் திருமதி  திரௌபதி முர்மு வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Who is likely to be elected as the President of India? Let's know the Election System, Vote Values and Vote Value required for Victory.

விஜய் பற்றிய தெரிந்த, தெரியாத, சுவரஸ்யமான தகவல்கள். தளபதி அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு – Known, Unknown, Lesser Know, Interesting and Sad information. Thalapathy Vijay’s 48th birthday special article.