விநாயகரை வழிபடும்போது தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் - விநாயகர் சகஸ்ரநாமம், விநாயகர் மூல மந்திரம், விநாயகர் ஸ்லோகம் கணபதி காயத்ரி மந்திரம் த்யான மந்திரம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரிகளுடன் Vinayagar Powerful Mantras, Ganapathi Slokas For Daily Pooja - Vinayagar Manthiram, Vināyakar Slōkam, Ganesha Sagasranamam, Original Mantra of Ganesha, Ganapati Gāyatri Mantiram, Meditation Mantra in Tamil and English Lyrics

English text and lyrics at the end of Tamil post

சைவ மதத்தின் முதல் தெய்வமாக வணங்கப்படுபவர் பிள்ளையார், கணபதி, கணேசா என பல பெயர்களில் அழைக்கபடும் முழு முதற் கடவுள் விநாயகர். நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் தடைகள், தொந்தரவுகள், வினைகள் போக்கி வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த விநாயகர் சகஸ்ரநாமம், விநாயகர் மூல மந்திரம், விநாயகர் ஸ்லோகம், கணபதி காயத்ரி மந்திரம், த்யான மந்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி பூஜை செய்து நல்ல பலன்களையும், வெற்றிகளையும், அருளையும் பெற்று வாழ்வில் வசந்தம் மற்றும் நற்பேறு அடையலாம். முடிந்தவரை மந்திரங்களை 11 முறை சொல்லுங்கள். திருப்பங்களும் ஏற்றங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது நம்பிக்கை.

தமிழ் மந்திரங்கள்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

 அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த

தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல

குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்.

சம்ஸ்கிருதம்

விநாயகர் சகஸ்ரநாமம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

விநாயகர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே

வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

விநாயகர் ஸ்லோகம்:

மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விளம்பித சூத்ர

வாமன ரூப மஹேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே.

விநாயகர் ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

கணபதி காயத்ரி மந்திரம்

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

 ஓம் ஏகதந்தாய வித்மேஹ

வக்ரதுண்டாய தீமஹி

தந்நோ தந்திஹ் ப்ரேசாதயாத்

 கணபதி காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மேஹ

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்திஹ் ப்ரேசாதயாத்

 ஓம் வினாயகாய வித்மேஹ

விக்ன ராஜாய தீமஹி

தந்நோ கணநாயக ப்ரேசாதயாத்

த்யான மந்திரம்  

(கோவிலில் சொல்ல வேண்டியது)

(வீட்டிலும் சொல்லலாம்)

ஏக தந்தம் சூர்ப கர்ணம்

கஜ வக்த்ரம் சதுர்புஜம்

பாசாங்குச தரம் தேவம்

த்யாயேத் ஸித்தி விநாயகம்

உத்தமம் கண நாதஸ்ய

வ்ரதம் ஸம்பத்கரம் சுபம்

பக்தானாம் இஷ்ட தாதாரம்

ஸர்வ மங்கள காரகம்

த்யாயேத் கஜாநனம் தேவம்

தப்த காஞ்சன ஸன்னிபம்

சதுர் புஜம் மஹா காயம்

ஸர்வாபரண பூஷிதம்

The first deity worshiped in the Saiva religion is Ganesha, the full-fledged deity known by many names such as Pillaiyar, Ganapati and Vinayaga. Ganapati is the giver of success in all the activities we start, overcoming obstacles, troubles and reactions. One can attain spring and good fortune in life by reciting mantras like Ganesha Sagasranamam, Ganesha Moola Mantra, Ganesha Slogan, Ganapati Gayatri Mantra, Dhyana Mantra suitable for Ganesha and performing good deeds, successes and blessings. Say the mantras 11 times as much as possible. Hope it will remove all obstacles and brings success.

TAMIL MANTRAS

AINTU KARATTANAI YĀNAI MUKATTANAI

INTIN ILAMPIRAI PŌLUM EYIRRANAI

NANTI MAKANTANAI ÑĀNAK KOZHUTTINAIP

PUNTHIYIL VAITTU ADI PŌRRUKINRĒNĒ

ALLALPŌM VALVINAIPŌM ANNAIVAYIRRIL PIRANTA

TOLLAIPŌM PŌKĀTH THUYARAMPŌM NALLA

KUNAMATIKA MĀAM ARUNAIK KŌPURATHIL MĒVUM

KANAPATHIYAIK KAITOZHUTAK KĀL.

SANSKRIT

GANESHA SAGASRANAMAM

SUKLAMBARATHARAM VISHNU SASI VARNAM CHATURBUJAM

PRASANNA VATHANAM THAYET SARVA VIGNOPA SANTAYE

THE ORIGINAL MANTRA OF GANESHA

OM SREEM HREEM KLIM KLEM KANGANAPATHAYE

VARAVARATA SRVA JANAMME VASAMINAYA SVAHA

VINĀYAKAR SLŌKAM

MŪSHIKA VĀKANA MŌTHAKA HASTA

CHĀMARA KARRA VILAMPITHA CHOOTRA

VĀMANA RŪPA MAHĒSVARA PUTRA

VIKNA VINĀYAKA PĀTHA NAMASTĒ

KAJANANAM BHUTA GANATHI SĒVITHAM

KAPITHTHA JUMBOO BALASAARA PAKSHATHAM

UMASOOTHAM SŌKA VINĀ SA KĀARANAM

NAMAMI VIGNESWARA PATHA PANKAJAM

GANAPATI KĀYATRI MANTIRAM

VAKRATUNTĀYA HIIM

ŌM NAMŌ HĒRAMPA MATHAMŌTHITHA

MAMA SARVA SANKADAM NIVĀRAYĒ SWĀAHĀ

ŌM KAM KSHIIPRA PRASĀTHANAĀYA NAMAHA

ŌM ĒKATANTHĀYA VIDDHMAHE,

VAKRATUNTĀYA DHII-MAHI,

THANNŌ THANTHI PRACHODAYAATH

GANAPATI GAYATRI MANTRA

OM TATPURUSHAYA VIDDHMAHE

CURVED FRAGMENTARY DHII-MAHI

TANNO TANDIH PRACHODAYAATH

OM VINAYAKAYA VIDDHMAHE

VIKNA RAJAYA DHII-MAHI

TANNO GANANAYAKA PRACHODAYAATH

MEDITATION MANTRA

ĒKA THANTHAM SOORPA KARNAM

GAJA VAKTHRAM CHATURBHUJAM

PĀSANKUSA TARAM THĒVAM

THYAYETH SIDDHI VINAYAGAM

UTTAMAM KANA NATHASYA

VRATHAM SAMPATHKARAM SUBAM

BHAKTHAANAM ISHTA THAATHAARAM

SARVA MANGALA KAĀRAKAM

THYAYETH KAJANANAM DEVAM

THAPTHA KĀÑCHANA SANNIPAM

CHATURBHUJAM MAHA KAAYAM

SARVĀPARANA POOSHITHAM

See YouTube video

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Who is likely to be elected as the President of India? Let's know the Election System, Vote Values and Vote Value required for Victory.

இந்திய குடியரசுத் தலைவராக யார் தேர்ந்தெடுக்க வாய்ப்பு? தெரிந்து கொள்வோம் தேர்தல் முறையையும், வாக்கு மதிப்புகளையும் மற்றும் வெற்றிக்கான் வாக்கு மதிப்பையும்.

விஜய் பற்றிய தெரிந்த, தெரியாத, சுவரஸ்யமான தகவல்கள். தளபதி அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு – Known, Unknown, Lesser Know, Interesting and Sad information. Thalapathy Vijay’s 48th birthday special article.